Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் பதவியேற்பு

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 2 பேர் பதவியேற்பு
த.லிங்கேஸ்வரன்

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக த.லிங்கேஸ்வரன், பா.கார்த்திகேயன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

பகிரவும் WhatsApp Facebook

உயர்நீதிமன்ற நீதிபதிகளாக த.லிங்கேஸ்வரன், பா.கார்த்திகேயன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.


சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 15 நீதிபதிகளை நியமிக்க, உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்திருந்தது. இதனை ஏற்ற குடியரசுத் தலைவர், 13 நீதிபதிகளை நியமித்து கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த மாவட்ட நீதிபதிகளான தர்மலிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவில் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன்மூலம் நீதிபதிகளின் எண்ணிக்கை, 67-ஆக உயர்கிறது. காலியிடங்கள் 8-ஆக குறைகிறது.

புதிய நீதிபதிகளை வரவேற்றுப் பேசிய தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், இரு புதிய நீதிபதிகளும் உயர்நீதிமன்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவர் என நம்பிக்கை தெரிவித்தார்.



முந்தைய செய்தி
முஸ்லீமாக மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பெற முடியாது
அடுத்த செய்தி
வேளாண்மையில் பெண் விவசாயிகள்: மகளிர் விவசாயிகள் தினம் கொண்டாட்டம்

தொடர்புடைய செய்திகள்